என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதா கோவில்"
- வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா கொடியேற்றம் நடைபெற்றது.
அதன் அருகில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொழுதுபோக்கு மேற்கொள்வதற்கும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழாவிற்கு மாதாகோவில் பங்குதந்தை குமாரராஜா ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் பாதர் ஆரோக்கியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், ஓஎல்எஸ் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா, மற்றும் மணி, ராக்கேஷ், பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான ராட்சத விளையாட்டு சாதனங்கள் ராட்டினம் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.
கலையரங்க வளாகத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியப்படி ஜெபம் செய்தனர். இரவு 11.45 மணியளவில் வாண வெடிகள் முழங்க, மின்னொளியில் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்போது பேராலய வளாகத்தில் வானவேடிக்கை நடத்தப் படும்.
புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பேராலயத்தை சுற்றியுள்ள செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பேராலயம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கிறார்கள்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.
தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர்பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்